Thursday, February 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/02/large/937829.jpgதண்டவாள சீரமைப்புப் பணி | போடி-சென்னை ரயில் சேவை ஒத்திவைப்பு: முதல் பயணத்தை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம்

போடி: மதுரையில் நடைபெறும் தண்டவாள சீரமைப்புப் பணியினால் வரும் 19-ம் தேதி போடியில் இருந்து சென்னைக்கு இயங்க இருந்த முதல் ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை-தேனி ரயிலும் 16-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை இருமார்க்கமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை ரயிலை எதிர்பார்த்திருந்த தேனி மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

மதுரை-போடி இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் பணி தொய்வடைந்த நிலையில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வரை அடுத்தடுத்து அகலபாதை பணிகள் முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த மே 27-ம் தேதி முதல் தேனி வரை பயணிகள் தினசரி ரயில் (06701/702) இருமார்க்கமாக இயக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...