Sunday, March 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/06/large/956156.jpgசிவகங்கை மாவட்டம் கொந்தகையில் ரூ.18.80 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம்: முதல்வர் திறந்தார்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கொந்தகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடியில்அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொந்தகையில் கீழடி அருங்காட்சியகம் (அகழ்வைப்பகம்) அமைக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். பின்னர், ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொல்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...