
சென்னை: மூளையில் ரத்தம் உறைந்து, கை,கால்கள் மரத்துப்போன நபர் 3 மணி நேரத்துக்குள் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பக்கவாதம் ஏற்படாமல் காப்பாற்றினர்.
சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (36). சில நாட்களுக்கு முன்பு அவரது கை, கால்கள் திடீரென செயலிழந்து மரத்துப்போன உணர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 3 மணி நேரத்துக்குள் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்