Wednesday, March 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/30/large/967779.jpgசொத்து வரி செலுத்துவோரை பாடாய் படுத்தும் ‘இணையதள சர்வர்’: ஆன்லைன் வரி வசூலுக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்குமா?

மதுரை: மாநகராட்சி சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஆன்லைன் முறையில் செலுத்த முடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். வரி வசூலை எளிமைப்படுத்த ஆன்லைன் பணவரித்தனைக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். வார்டுகள் 5 மண்டலங்களாக பிரித்து மண்டலம் வாரியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூல் செய்யப்படுகிறது. இதில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் சொத்துகளுக்கு செலுத்தும் சொத்து வரி வசூல் மூலம் மட்டுமே ஆண்டிற்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிகரமாக உள்ளது. மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைன்
(https://ift.tt/ZkTP6An) மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தும் வசதிகள் உள்ளன. நேரடியாக செலுத்துவதற்கு வார்டுகளில் வரி செலுத்தும் மையங்கள் உள்ளன. ‘கரோனா’ பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு, ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதையே ஊக்குவித்தது. மக்களும் ஆர்வமாக ஆன்லைன் மூலமே சொத்து வரி செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...