Saturday, April 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/02/large/969652.jpgசென்னை மெட்ரோவில் மார்ச் மாதத்தில் 70 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99,341 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69,282 பேர் பயணம் செய்தனர். பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் 6 லட்சத்து 30,059 பேர் அதிகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21 லட்சத்து 61,453 பேரும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப்பயன்படுத்தி 44 லட்சத்து 76,793பேரும் பயணம் செய்துள்ளனர். டோக்கன்களை பயன்படுத்தி 3 லட்சத்து 55,702 பேரும், குழுபயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,393 பேரும் பயணம் செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...