
சென்னை: பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற அமர்வு, தற்போதைய சூழலில் அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்து, விசாரணையை வரும் ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடைமற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து, 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்