Saturday, May 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/07/large/986693.jpgஅதிமுக ஆட்சியில் கட்டிய பள்ளி வளாகத்தில் தாம்பரம் காவல் ஆணையரகம் - தமிழக அரசுக்கு பழனிசாமி கண்டனம்

சென்னை: காவலர் குழந்தைகளின் கல்விக்காக அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகமாக மாற்றியிருப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை அடுத்த திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூரில் காவலர்கள் அதிக அளவில் குடியிருக்கின்றனர். இவர்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உலகத் தரத்தில் கல்வி வழங்கும் நோக்கில் ரூ.51 கோடியில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி அமைக்க கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த 2018-ல், 1 முதல் 4-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. 2021-ல் இப்பள்ளி திறக்கப்பட்டு ஆங்கில வழியில் இருபாலர் படிக்கும் பள்ளியாக, 1 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட அரசு ஆணை பிறப்பித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...