
கல்பாக்கம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2007-ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னாள் மாணவர்கள்சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களின் பள்ளி கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்