Monday, June 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/12/large/1012179.jpgமதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் பொறுப்பேற்பு - அலுவல் சார் தக்கராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவு

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையராக எஸ்.கிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார். மேலும் தக்கராக இருந்த கருமுத்து தி.கண்ணன் உடல் நலக்குறைவாக காலமானதால், அலுவர் சார் தக்கராகவும் எஸ்.கிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் தகுதியிலிருந்து துணை ஆணையர் தகுதிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் துணை ஆணையராக ஆ.அருணாசலம் பொறுப்பேற்றார். அதன்பின்னர் துணை ஆணையர் நிலையிலிருந்து இணை ஆணையர் நிலைக்கு தகுதி மாற்றப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நேற்று இணை ஆணையராக எஸ்.கிருஷ்ணன் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையராக இருந்து பதவி உயர்வில் இணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...