Sunday, July 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/17/large/1054878.jpgகருணாநிதி நினைவாக அமைக்கப்படும் பேனா சின்னம் இடமாற்றமா? - நினைவிடத்திலேயே அமைக்க திட்டம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் அமைக்க திட்டமிட்டிருந்த பேனா சின்னத்தை, அவரது நினைவிடத்திலேயே சிறிய அளவில் அமைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், ரூ.81 கோடியில் நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவெடுத்து, தமிழக கடலோர மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...