
நாமக்கல்: 2018-2023 வரையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 35,000 கோடி அபராதம் வசூலித்ததாக சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதுபோன்ற வழக்கில், வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 34,500 இழப்பீடு வழங்க, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளிள்ளது.
கோவை, வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவரது மனைவி யசோதா (62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017 மே மாதத்தில் அவரது சேமிப்பு கணக்கில் ரூ. 831-ம், ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் ரூ. 1,44,000-ம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்