Friday, August 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/19/large/1099862.jpgசந்திரயானில் இருந்து பிரிந்த லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு: தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரம்

சென்னை: நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதிஇஸ்ரோ விண்ணில் செலுத்தியது.அதன்பின் பூமியை சுற்றிவந்தவிண்கலம் ஆக.1-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது.

இதையடுத்து சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் 4 முறை குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகேவிண்கலம் கொண்டு செல்லப்பட்டது. நிலவின் தரையில் இருந்து 153கி.மீ உயரத்தில் இருக்கும்போது சந்திரயானின் உந்துவிசை கலனில்இருந்து லேண்டர் நேற்று முன்தினம்வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...