Monday, September 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/12/large/1122136.jpgகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் ரூ.1,000 பெற 1.06 கோடி பேர் தகுதி: தமிழக அரசின் மாபெரும் திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளதாக 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் மாபெரும் திட்டம் இது என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர், சிறு தவறுகூட நடந்துவிடாமல் மிகுந்த கவனத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை, அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...