
சென்னை: சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து ‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கவன ஈர்ப்புக்காக பலர் பேசி வருகின்றனர். இதுபோன்ற எதிர்ப்புகளை பெரியார், அம்பேத்கர் என பலரும் சந்தித்துள்ளனர். அமைச்சர் முன்வைத்தது சனாதன சக்திகளுக்கு எதிரான கருத்தே தவிர, இந்துக்களுக்கு எதிரான கருத்தல்ல. சனாதன சக்திகள் என்றால் சமூகத்தில் நிலவும் பாலின, சாதியப் பாகுபாட்டை நியாயப்படுத்துபவர்கள். பாகுபாடுகள் களையப் பெற்று ஜனநாயகம் வளர வேண்டும் என விரும்புகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்