Saturday, September 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/10/large/1120553.jpg“காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை” - பாமக தலைவர் அன்புமணி

மேட்டூர்: “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சார்பில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது: மேட்டூர் அணையை தூர்வாரி 20 டிஎம்சி நீர் கூடுதலாக சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் குறுவை விவசாய நிலம் கருகிக் கொண்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...