Saturday, October 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/08/large/1135415.jpgகாவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம்? - சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு கூடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...