Saturday, October 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/08/large/1135352.jpgவருமானவரித் துறை 3-வது நாளாக சோதனை: ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத் துறை விசாரணை

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமானஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...