
சென்னை: பள்ளிக்கல்வி துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ்பெற்றனர். வரும் 9-ம் தேதி திங்கள்கிழமை வழக்கம்போல பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களும், பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்களும், வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி பணிநியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்