Sunday, October 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/02/large/1131968.jpgபேச்சுவார்த்தை தோல்வி; இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

சென்னை: ஊதிய முரண்பாட்டை களையக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசு முன்வைத்த கூடுதல் கால அவகாசத்தை ஏற்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர்களின் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், 1.6.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய வேறுபாடு உள்ளது. இதை களையக்கோரி செப்டம்பர் 28 முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் குடும்பத்துடன் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...