Tuesday, October 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/10/large/1136688.jpgதனியாரை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் அதிக பிரசவம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் தகவல்

மதுரை: தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு அதிக பிரசவம் நடந்துள்ளது. மொத்த 9 லட்சம் பிரசவங்களில் அரசு மருத்துவர்கள் 5.5 லட்சம் பிரசவங்களை பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமணைகளில் 3.5 லட்சம் பிரசவங்கள் மட்டுமே நடந்துள்ளது.

கடந்த காலத்தில் கிராமங்கள், நகரங்கள் வித்தியாசமில்லாமல் வீடுகளில் பிரசவம் பார்க்கும் நிகழ்வுகள் மிக சாதாரணமாக நடந்தன. அதனால், வெளிச்சத்திற்கு வராத தாய், சேய் உயிரிழப்புகளும் அதிகம் நடந்தது. அதை தடுக்க, தற்போது பெண்கள், கர்ப்பமடைந்தவுடன் அவர்களை கண்காணித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகள், தடுப்பூசிகள் போட்டு சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்படுகின்றனர். அதனால், வீடுகளில் பிரசவம் முழுமைமையாக தடுக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...