Sunday, November 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/05/large/1149098.jpgமதுரை காமராசர் பல்கலை.யில் தொடரும் சம்பளம், ஓய்வூதியப் பிரச்சினை: உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த பேராசிரியர்

மதுரை: மதுரை காமராசர் பல்கலை.யில் பணிபுரியும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்திற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.10.50 கோடி தேவை இருக்கிறது. இதற்கான நிதியை சேகரிப்பதில் பல்கலை நிர்வாகம் மாதந்தோறும் திணறுகிறது. போதிய வருவாய் இன்றி தொடர்ந்து இப்பல்கலை நிதி நெருக்கடியை சந்திப்பதே இதற்கு காரணம்.

கடந்த மாதத்திற்கான சம்பளம் , ஓய்வூதியம் நேற்று வரை வழங்கப்படவில்லை. பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் சம்பளம், ஓய்வூதியத்தை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ஆளுநர் மற்றும் உயர்கல்வித்துறை செயலர் மற்றும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றும், விடிவு காலமின்றி தவிக்கின்றனர். தீபாவளி கொண்டாடுவதற்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதில் சிரமத்தை சந்திக்கும் சூழலும் தற்போது உருவாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...