
சென்னை: தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அவர்களது சிகிச்சைக்காக தமிழக அரசு ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ என்ற திட்டம் கடந்த 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழக எல்லைக்குள் நிகழும் சாலை விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்