Tuesday, December 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/06/large/1163659.jpg“எனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை” - கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின், மிக்ஜாம் புயல் காரணமாக தனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை என எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

“எனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை. பல்வேறு இடங்களில் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என உறுதியாக தெரியவில்லை” என அஸ்வின் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் 30+ மணி நேரத்துக்கு மேலாக வேளச்சேரி பகுதியில் மின்சாரம் இல்லை என தெரிவித்திருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்த அஸ்வின் இதை தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...