Tuesday, January 2, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/02/large/1177351.jpgபச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுகரும்பும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...