
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.
“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கவுள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது ‘Titans Of Tamil Nadu’ (தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்கள்) மற்றும் One Trillion Dreams (ஒரு ட்ரில்லியன் கனவுகள்) ஆகிய பரப்புரைகள் பரவலான ஆர்வத்தை ஏற்படுத்தியது. 450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், உலகப்புகழ் பெற்ற 170 பேச்சாளர்கள், 50 உலக நாடுகளின் பங்கேற்பு என உலக முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்