Thursday, January 11, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/12/xlarge/1182597.jpgசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

சென்னை: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 22-ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி எஸ்.அல்லி, அவரது நீதிமன்ற காவலை 15-வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...