Friday, June 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/26/large/686370.jpg‘இந்து தமிழ் திசை’ வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி - ‘சிறு, குறு தொழிலை மீட்டெடுப்போம்’ : ஆன்லைனில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் பல்வேறு சிறு மற்றும்குறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. அதிலிருந்து தொழில்களை மீட்டெடுக்கும் வகையிலும்,‘சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் (MSME) தினம்’ ஜூன் 27-ம் தேதி கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டும், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுப்போம்’ என்றஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக அரசின் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் செயலாளர் வி.அருண் ராய், ஐஏஎஸ்., ஜி.கே.எம் குளோபல் சர்வீசஸ் பி.லிட். நிறுவனர், பட்டய கணக்காளர் சிஏ ஜி.கார்த்திகேயன், கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, சென்னை கிஸ்ஃப்ளோ தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கவுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...