Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687316.jpgசென்னை புறநகரில் மின்தடைக்கு நிரந்தரத் தீர்வு; துணை மின் நிலையங்கள், மின் பாதைகளில் பராமரிப்பு பணி நிறைவு: மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்

சென்னை புறநகரில் மின் தடையை தவிர்க்க துணை மின்நிலையங்கள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு. பணிகள் நிறைவுபெற்றதாக மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டது. மின் உற்பத்தியில் பிரச்சினை இல்லை என்றாலும் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின் சாதனங்களில் குறைபாடுகள் உள்ளன. கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் எதுவும் சரிவர நடைபெறவில்லை. அதுதான் தற்போதைய மின்தடைக்கு காரணம் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதையடுத்து கடந்த 19-ம் தேதி முதல் நேற்று வரை போர்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள மின் வாரியம் அறிவுறுத்தியது. இதற்காக மின் பகிர்மான வட்ட அளவில் பராமரிப்புப் பணிக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...