Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687311.jpgசாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டம் தொடக்கம்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே முடிவு செய்தது.அதன்படி, நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் குறித்து அமைச்சர் நாசர் கூறியதாவது: தூய்மை திருவள்ளூர் திட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து, முதல் கட்டமாக ஜூன் 28 முதல் ஜூலை 4-ம் தேதி வரை, ‘தூய்மை திருவள்ளூர்’ வாரமாக கடைபிடித்து, சாலை ஓரங்களில் குப்பையை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...