Sunday, June 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/28/large/687037.jpg‘ஜெய்ஹிந்த்’ குறித்த கொமதேக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு- பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க பாஜக முயற்சி

‘ஜெய்ஹிந்த்’ குறித்த கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரனின் பேச்சை பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க முயற்சி செய்வோம் என பாஜக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலைநிமிரத் தொடங்கி விட்டது’ எனத் தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்கள் மூலமாக வேகமாக பரவிய அவரது கருத்துக்கு, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...