
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த குடும்பத்தினருக்கு சுயதொழில் தொடங்க ஆஷா என்ற திட்டத்தில் கடன் உதவி பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திட்டம் வரவேற்கத்தக்கது. அதனடிப்படையில் புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஆதிதிராவிட இன மக்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்