
சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நேற்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், கூடுதல் ஆணையர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். 2021-22 கரும்பு அரவைப் பருவம் நல்ல முறையில் இயங்குவற்கும், சர்க்கரை ஆலை கட்டுமானத்தை உயர்த்துவது உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து விவாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்