Sunday, July 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/19/large/694738.jpgஅடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 2007-ம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011-ம் ஆண்டில் அதைத் திறந்துவைத்தார்.

பின்னர் வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்தது. அங்கு தொல்காப்பிய பூங்கா என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் அகற்றப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் இப்பூங்காவை பார்வையிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இப்பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...