Sunday, July 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/12/large/692232.jpgதமிழகத்தில் பிரிவினைவாதத்துக்கு இடம் இல்லை: கே.எஸ்.அழகிரி, டிடிவி தினகரன் கருத்து

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள முன்னாள் ஆளுநருமான பா.ராமச்சந்திரன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாசென்னை சத்தியமூர்த்தி பவனில்நேற்று நடைபெற்றது. பா.ராமச்சந்திரன் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங். மாநில முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பா.ராமச்சந்திரனின் மகன் டாக்டர் ரவிராம் ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறும்போது, "கொங்கு நாடு என்ற தனி மாநிலம்சாத்தியமற்றது, தேவையற்றது. தனி மாநிலம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் யாரும் கோரவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பவே, பிரித்தாளும் சூழ்ச்சியாக இந்த சர்ச்சையை பாஜகவினர் முன்னெடுத்துள் ளனர். தமிழகத்தில் ஒருபோதும் பிரிவினைவாதத்துக்கு இடமில்லை. அதேபோல, தமிழகத்துக்கு 2 தலைநகரம் என்பதும் சாத்தியமற்றது" என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...