Friday, July 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/24/large/696661.jpgவருமானவரி கணக்கு மறு மதிப்பீடுக்கு எதிர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு: வருமான வரித் துறை பதில் அளிக்க உத்தரவு

கடந்த 2014-15 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, வருமான வரித் துறையினர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை முட்டுக்காடு பகுதியில் தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் பெற்ற தொகை ரூ.6.38 கோடிக்கு முறையாக வருமானவரி கட்டவில்லை எனக் கூறி கடந்த 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்வது குறித்து கார்த்திசிதம்பரம் மற்றும் அவரது மனைவி நிதி ஆகியோருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் பிறப்பித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...