
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் தங்கிவிட்டு நேற்று மாலை சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருக்கு கடலூர் மாவட்ட எல்லை பகுதியான சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றுபாலம் அரு கில் திமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தொழில்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன், நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன், குமராட்சி ஒன்றிய திமுகசெயலாளர்கள் சங்கர், ராஜேந்தி ரன், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர் அப்பு சந்திரசேகர், வல்லம்படுகை மஞ்சு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்