
கடந்த ஒரு மாதத்தில் மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவில் இருந்து 13 காவலர்கள் வேறு பிரிவுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆணையர் தலைமையில் (ஐஎஸ்) ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் போராட்டம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு தொடர்பான நிகழ்வுகளை முன்கூட்டியே சேகரித்து, காவல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், வியாழக்கிழமை தோறும் நுண்ணறிவு பிரிவு காவலர்களின் கூட்டத்தை நடத்தி, அவர்களது உளவுத் திறனை பரிசோதிக்கிறார். இதன் அடிப்படையில், 9காவலர்கள் நுண்ணறிவு பிரிவில்இருந்து வெளியேற்றப்பட்டு, காவல் நிலைய பணியிடத்துக்கு மாற்றப்பட்டனர். இருநாட்களுக்கு முன்னர், மேலும் 4 பேர் இங்கிருந்துவெளியேற்றப்பட்ட னர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்