
புதுச்சேரி லாஸ்பேட் சட்டப்பேரவைத் தொகுதிபாஜக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மக்கள் நலன் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் புதுச்சேரி பாஜக எதிர்க்கும். தமிழகத்துக்கு தண்ணீர் குறைந்தால் காரைக்காலுக்கும் நீர் வரத்து குறையும். குறிப்பாக மேகேதாட்டு அணையால் தண்ணீர் வரத்து குறையும். புதுச்சேரி மாநில நலனை பாதிக்கும் எந்த விஷயத்தையும் பாஜக எதிர்க்கும். மேகேதாட்டுவில் அணை கட்டினால் புதுச்சேரி விவசாயிக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறுவோம். தேசிய தலைமையிடமும் எடுத்துக் கூறுவோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்