Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690147.jpgசாரல் காலத்தில் வெறிச்சோடிய குற்றாலம்; 2-வது ஆண்டாக வருவாய் இழந்த வியாபாரிகள்: வெளியூர்களில் கடை அமைத்து அரிய வகை பழங்கள் விற்பனை

சாரல் காலத்தில் இரண்டாவது ஆண்டாக குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. குற்றாலம் மலைப் பகுதியில் விளையும் அரிய வகை பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் சுற்றுவட்டாரப் பகுதி களில் சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்வதால் தென்காசி அருகே சாலையோரத்தில் தற்காலிக கடை வைத்து அரியவகை பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள். கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டதால் கடந்த ஆண்டு சுமார் 9 மாதங்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் கடந்த மே 24-ம் தேதி தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது முதல் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...