
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நீக்கம் செய்யப் பட்ட 96 தற்காலிக செவிலியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி இரண்டாவது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றிய 96 செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தினசரி 444 ரூபாய் வீதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 96 பேரையும் கடந்த 1-ம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்