
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீஉருமன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோயிலைச் சுற்றிலும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. உரிய அனுமதி பெறாமல் இந்த நிலத்தில் ஊராட்சி நிர்வாகத்தினர் சாலை அமைத்துள்ளனர்.
இதை பொதுப்பாதை யாக பலர் பயன்படுத்தி வருகின் றனர். இதேநிலை நீடித்தால் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்படும் நிலை உள்ளது. இந்த சாலையை அகற்ற அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் போராடி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்