
தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(53). இவர், பாஜக பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது 15 வயது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக அந்த சிறுமியும், பெண்ணும் சென்னை பெருநகர காவல்
துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீஸாருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்