
கோவையில் உள்ள சாலைகளில், வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக கட்டுப்பாட்டு அளவுகள் மாற்றப்பட்டுள்ளன. வேக அளவுகளை மீறினால், தொடர்புடைய வாகனஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க காவல்துறையினர் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்துவரு கின்றனர். இந்நிலையில், ஆட்சியர்ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகளில் இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங் களின் வேக கட்டுப்பாட்டு அளவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்