
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த மக்கள் குறைதீர்வுக்கூட்டம், விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மாறாக, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடவும் அறிவுறுத்தப்பட்டிருந் தது.
இந்நிலையில், கரோனா பாதிப்பு பெரும் அளவில் குறைந்ததால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது போக்கு வரத்து தொடங்கியதால் திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த ‘மக்கள் குறை தீர்வுக்கூட்டம்’ வழக்கம்போல நடைபெறும் என எண்ணிய 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்குக்கு நேற்று வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்