Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701323.jpgராஜீவ்காந்தி சாலையில் டைடல் பார்க் அருகே ரூ.108 கோடியில் ‘U’ வடிவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்: போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்களில் பயணிக்கலாம்

ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் டைடல் பார்க் அருகே ரூ.108 கோடியில் ‘U’ வடிவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடியும்போது, அங்குள்ள 2 சிக்னல்களை அகற்றி விட்டு, வாகனங்கள் சீராக செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பிரதான சாலையாக இருக்கும் ராஜீவ்காந்தி சாலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு வகையான அலுவலகங்கள் இருப்பதால், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் வந்து செல்கின்றன. இதனால், இந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டாலும், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...