Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708770.jpgசென்னையில் அடுத்த 25 ஆண்டுகளின் குடிநீர் தேவைக்காக 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னைக்கு அடுத்த 25 ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதிகளவில் நீர் சேகரிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின் மீது முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘‘சென்னைக்கான குடிநீருக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், ஜப்பானின் ஜைகா நிதியின் மூலம் பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட திட்டத்தை ரூ.6,078 கோடியில் செயல்படுத்த, ஒப்பந்தப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தற்போது சென்னையில் தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேறும்போது, ஏரிகளில் இருந்து நீர் எடுக்காமலேயே 870 மில்லியன் லிட்டரைப் பெற முடியும்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...