Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708430.jpgதேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: 16 சொகுசு கார்கள், பணம் பறிமுதல்

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக டெல்லி அமலாக்கத் துறையினர் புதிதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஐபோன் மூலமாக பல ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதாக கூறி, டெல்லி தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சுகேஷ் சந்திரசேகருக்கு வெளியில் இருந்து உதவிய இருவரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...