Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701763.jpgதமிழகத்தில் நவம்பர் 1 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம்: அன்றே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், ஒரு மாதத்துக்கு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற உள்ளது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியல் திருத்தும் பணி குறித்த அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அது தொடர்பான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை நவம்பர் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அவற்றின் மீது டிசம்பர் 20-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...