Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702545.jpgகருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவாக இணையவழி மாரத்தான் போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவாக, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் இணையவழி மெய்நிகர் மாரத்தான் போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, இணையவழி மெய்நிகர் மாரத்தான் போட்டி கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில்பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இணையவழி மெய்நிகர் மாரத்தான் போட்டியின் முதல் பதிவை அவரது நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர், பதிவு செய்திருந்த 12 பேருக்கான ரசீதை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...