
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை என புகார் தெரிவித்து, கடந்த 6-ம் தேதி பொன்னேரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் புதிய மேலாளராக கடந்த 9-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்ட கணேஷ் நேற்று கும்மிடிப்பூண்டி உள்ளடங்கிய சென்னை - கூடூர் ரயில்வே மார்க்கத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்